↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா நடிப்பில் பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘ காக்கி சட்டை’.

அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. தற்போது இப்படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

'' இப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக ’சீக்ரெட்’ எனும் ஒரு புத்தகம்தான் இருந்தது. அந்தப் புத்தகத்தை வெற்றிமாறன்தான் எனக்குக் கொடுத்தார்.

அதில் ‘நீ ஏதேனும் சாதிக்க விரும்பினால் 24*7 என அதையே நினைத்து உழைத்தால் அதை அடைந்துவிடுவோம் என நம்பிக்கையோடு நினைக்க வேண்டும்’. இதுதான் ‘காக்கி சட்டை’ படத்தின் அடித்தளம். 

’எதிர்நீச்சல்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பட உருவாக்கத்தில் முழு சுதந்திரம் கொடுத்த தனுஷுக்கு எனது நன்றி'' என்கிறார் துரை செந்தில்குமார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top