↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் இணையதளத்தை யாரோ சிலர் முடக்கியுள்ளனர். வலைத்தளத்தைத் திறந்தால் பாகிஸ்தான் நாட்டின் கொடி பறக்கிறது. உங்கள் தளம் முடக்கப்பட்டுள்ளது என அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. முன்பு தனி நபர் இணையதளங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த போது, அடிக்கடி அவை முடக்கப்படும். தளத்தைத் திறந்தால், ஆப்கானிஸ்தான், துருக்கி அல்லது நைஜீரியா நாட்டுக் கொடி பறக்கும்... நாங்கள்தான் முடக்கி வைத்திருக்கிறோம் என யாரோ ஒரு நபர் அறிவித்திருப்பார்.
கொஞ்சம் விஷயமுள்ளவர்கள் அலசி ஆராய்ந்து பார்த்து, அது உள்ளூரைச் சேர்ந்த தனக்கு ஆகாத அல்லது மிக வேண்டிய யாரோ ஒருவரின் கைங்கர்யம் அது என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். இப்போது இந்த தனிநபர் தள ஹேக்கிங் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால் அரசு அல்லது அமைப்பு சார்ந்த தளங்களை, பிரபலங்களின் தளங்களை முடக்கும் வேலை மட்டும் நின்றபாடில்லை. இப்படித்தான் சமீபத்தில் பிரபல நடிகர் மோகன்லாலின் இணையதளத்தை இன்று முடக்கியுள்ளனர். தளத்தைத் திறந்தால் சுதந்திர காஷ்மீர் கேட்டு கோஷம் எழுப்பியுள்ளதோடு, அதில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை பறக்க விட்டுள்ளனர். மேலும் 'எங்கள் இலக்கு உங்களது அரசுத் துறை இணைய தளங்கள்தான்.. ஜம்முவிலும் காஷ்மீரிலும் நடந்த உங்களின் மனிதாபிமான விரோத செயல்களை மறக்க மாட்டோம். லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். இந்திய ராணுவம் காஷ்மீரி குடும்பங்களை, அப்பாவி குழந்தைகளைக் கொன்றிருக்கிறது..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் இணைய தள சர்வருக்கும் ஆபத்து நெருங்குகிறது, என்றும் எச்சரித்துள்ளனர். இதையெல்லாம் எழுதிவிட்டு கடைசியாக ஒரு குறிப்பை விட்டுச் சென்றுள்ளனர். அதில், "அன்புள்ள நிர்வாகிக்கு, இந்த தகவல் அனைவருக்கும் சேர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தோம். முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல,' என்று குறிப்பிட்டுள்ளனர்.
Home
»
cinema
»
cinema.tamil
»
news
»
news.india
» மோகன்லால் இணையதளத்தை முடக்கம்... தளத்தில் பாகிஸ்தான் கொடி பறக்குது!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment