ஜெயலலிதாவுக்கு சாதகமாக சில சட்டப் பிரிவுகள் இருந்த காரணத்தாலும், அவருக்காக ஆஜரான ராம்ஜேத்மலானி பல சுப்ரீம் கோர்ட் வழக்கின் தீர்ப்புகளை முன்வைத்து ஆணித்தரமாக வாதாடியதாலும்தான் அரசுத் தரப்பு எதிர்ப்பை, நிபந்தனை ஜாமீன் என்ற நிலைக்கு பவானி சிங் மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கோர்ட் மீண்டும் கூடியதும் ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தை முன்வைத்தார்.
இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. இதுதொடர்பாக லில்லி தாமஸ், ரவி பாட்டீல் ஆகியோரது வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்கலாம். ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு ஜாமீன் அளித்தால் அவர் எங்கும் தப்பியோடி விட மாட்டார். அவர் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பவர் ஆவார். கோர்ட் உத்தரவிட்டபோதெல்லாம் அவர் நேரில் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும். ஜெயலலிதாவிடம் உள்ள நகைகள் 1971ம் ஆண்டு அவரது பெற்றோர்களிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்தவையாகும். அவரது குடும்ப நகை. ஆனால் இந்த வாதத்தை தனி நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட்டார். இதையடுத்து பவானி சிங்கின் வாதம் தொடங்கியது. பவானி சிங் வாதிடுகையில், ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தனது முதல்வர் பதவிக்காலத்தின்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிய ஜெயலலிதா பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக முறையான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு அவை நிரூபிக்கவும் பட்டுள்ளன. எனவே இவரை தற்போது ஜாமீனில் விடுவித்தால் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பார். அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துவார். எனவே ஜாமீன் தரக் கூடாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராம்ஜேத்மலானி, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக நடந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா ஒரு முறை கூட தவறான வழியில் நடந்ததில்லை. மேலும் அவர் இந்த காலகட்டத்தில் 2 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இது அரசியல் சூழ்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்காகும் என்றார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வாதிட்டனர். ராம்ஜேத்மலானியின் 2வது கட்ட வாதம் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சுதாகரன் திருமணச் செலவு குறித்த வாதத்தை முன்வைத்தார். "ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவில்லை. அதை அவர் ஏற்கவில்லை. மாறாக பெண் வீட்டார்தான் செலவு செய்தனர், அனைத்து செலவையும் அவர்கள்தான் ஏற்றனர்" என்று அவர் வாதிட்டார். ஜெ.வுக்கு சாதகமான சட்டப் பிரிவு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனைதான் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தாராளமாக ஜாமீன் தரலாம் என்று ராம்ஜேத்மலானி சட்ட நுணுக்கங்களையும், பிற தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டி வாதாடினார். மேலும் சுப்ரீ்ம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளையும் அவர் விரிவாக எடுத்து வைத்து வாதாடினார். இதன் காரணமாகவே காலையில் எதிர்ப்பு தெரிவித்த பவானி சிங் பிற்பகலில் தனது நிலையை மாற்றிக் கொள்ளக் காரணம் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment