கேடி படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார் இலியானா. அதன்பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் நாயகியாக நடித்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் செக்ஸ் பற்றிய பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இவர் சமீபத்தில் தெலுங்கு பத்திரிக்கை ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘செக்ஸ் ஒன்று மட்டுமே மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றும், செக்ஸ் மனிதனுக்கு இன்றியமையாதது மட்டுமின்றி சந்தோஷம் அளிக்கக்கூடிய செயல் என்றும் மிகவும் தைரியமாக பேட்டி கொடுத்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் கூட ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டவர்தான் இவர். அதாவது 16வது வயதிலேயே அப்பாவுடன் செக்ஸ் பற்றி விவாதித்திருக்கிறேன் என்றும் சொல்லி அப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இலியானாவின் இந்த வெளிப்படடையான பேச்சு பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment