கடந்த வாரத்தில் வெளியான ஜீவா, மெட்ராஸ் இரண்டுமே ஆஹா! ஆனால் வரவேண்டிய தியேட்டர் கலெக்ஷனை ஒரேயடியாக ஸ்வாகா செய்துவிட்டது அம்மா விவகாரம்!
பொதுவாக ஒரு படம் திரைக்கு வந்து வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களில் பார்ப்பதுதான் கலெக்ஷன். அதற்கப்புறம் வருகிற திங்கள் டூ வெள்ளி திருப்பதி மொட்டைதான். வேலை நாட்கள் என்பதாலும், ஜனங்களின் அவசர பரபர வேலைகளுக்கு மத்தியிலும் தியேட்டர்கள் வெறிச்சோடும். அப்படியொரு முக்கியமான சனி ஞாயிறுகளை காலி பண்ணியது கர்நாடக ஸ்பெஷல் கோர்ட் வழங்கிய தீர்ப்பு. யாரை நொந்து என்ன பண்ண?
நம்ம கவலையோடு அம்மா கவலையும் சேர்ந்துகிச்சே என்று முடங்கினார்கள் தயாரிப்பாளர்கள். இந்த லட்சணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக படத்தில் வசனங்கள் வைத்திருந்த காரணத்தால் ஜீவா படக்குழுவினர் மீது வழக்கு தொடுக்க தயாராகி வருகிறதாம் கிரிக்கெட் கிளப்
0 comments:
Post a Comment