↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் வில்லனாக ரீ எண்ட்ரி ஆன அருண்விஜய் அந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது தனது அடுத்த படமான 'வா டீல்' படத்தின் ரிலீஸை எதிர்பார்த்திருக்கும் அருண்விஜய், இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் அடுத்த வீட்டு பையனை போன்ற ஒரு இயல்பான கேரக்டர் என்றும், அதே நேரத்தில் இரண்டாவது பாதியில் ஒரு ரேஸ் த்ரில்லராக மாறும் கேரக்டர் என்றும் கூறியுள்ளார். இந்த படத்திற்காக பல ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளதாக கூறிய அவர், இந்த படத்தில் முதன்முதலாக சென்னைத் தமிழில் பேசி நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சரவணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'இவன் வேற மாதிரி' படத்தின் கன்னட ரீமேக்கில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய அருண்விஜய், 'சரவணன் அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்யப்போவது இல்லை என்றும், அந்த படத்தின் கதையின் மையப்புள்ளியை மற்றும் வைத்துக்கொண்டு கன்னடத்திற்கு தகுந்த மாதிரி வேறு திரைக்கதையை தயார் செய்துள்ளார் என்றும், வில்லன் கேரக்டருக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறிய அருண்விஜய், மிக விரைவில் அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top