
இந்திப் படத்தில் நடிக்க இருப்பதாக வந்த தகவலை சூர்யா மறுத்துள்ளார்.‘மாஸ்’ படத்தை அடுத்து விக்ரம் குமார் இயக்கும் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்துவருகிறது. இந்தப் படங்களை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகும் படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்றும் அதில் பிரியங்கா சோப்ரா, சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதை சூர்யா மறுத்துள்ளார். ‘அப்படியொரு திட்டமே இல்லை. அந்தப் படம் தொடர்பாக யாரும் என்னிடம் பேசவும் இல்லை’ என்று அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment