பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியான சில நாட்களிலே அதன் வசூல் ரூ. 100 கோடியை தாண்டியது, 150 கோடியை தாண்டியது என ரசிகர்கள் தகவலை பரப்பி விடுகின்றனர்.
சிறிது நாட்களுக்கு முன்பு வெளியான கத்தி, லிங்கா, ஐ போன்ற படங்களுக்கும் இப்படி தான் பரப்பி விட்டனர், ஆனால் சமீபத்தில் அந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்தி சொல்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்போது விஜய் நடித்து வெளிவரவிருக்கும் புலி படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 120 கோடி இருக்கும் என தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்ரீ தேவிக்கு சம்பளம் ரூ. 5 கோடி, ஒரு பாடலுக்கு ரூ. 5 கோடி, விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா சம்பளம், பலவிதமான கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு பல கோடிகள் படத்தின் மற்ற தயாரிப்பு செலவிற்கு சில கோடி என மொத்தம் ரூ. 120 கோடி சொல்கின்றனர்.
உண்மையில் அவ்வளவு செலவு செய்தால் அதை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்குமா என்று கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment