↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘அதிபர்’. பென் கன்ஸோர்டியம் ஸ்டுடியோஸ் சார்பாக டி. சிவகுமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு பி.பி.சரணவன். ஜீவன் ஜோடியாக வித்யா நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சிங்க முத்து, ராஜ்கபூர் நடிக்கின்றனர். விக்ரம் செல்வா இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதுகின்றனர்.ஒளிப்பதிவு, பிலிப் விஜயகுமார்.
படத்தை, மாயி, திவான், மாணிக்கம் படங்களை இயக்கிய சூரியபிரகாஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக்கொண்டு வாழும் ஜீவன், நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலா கக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ரஞ்சித், இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை.படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது’ என்றார்.
0 comments:
Post a Comment