
ஆனால், வெங்கட் பிரபு சோனாவுக்கு படம் இயக்கிக் கொடுக்கவில்லை. இதனால் சோனா, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெங்கட் பிரபு மீது புகார் கொடுத்தார் சோனா. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார், வெங்கட் பிரபு, சோனா மற்றும் இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சோனாவுக்கு படம் இயக்காத வெங்கட் பிரபு, அவரிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாயில், மே மாதத்துக்குள் ஒரு கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.இதுபற்றி சோனாவிடம் கேட்டபோது, பேச மறுத்து விட்டார்.
0 comments:
Post a Comment