↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் வெளிநாட்டு ரிசல்ட்? - Cineulagam
மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா-2 ஆகிய இரண்டு படங்களும் இன்று திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படங்கள் வெளிநாடுகளில் நேற்று நள்ளிரவு ரிலிஸாகிவிட்டது.
மேலும், தமிழகத்தில் காலை 8 மணியளவிலேயே ஷோ ஆரம்பித்து விட்டது. வெளிநாட்டு ரசிகர்களின் கருத்து கணிப்பின் படி இரண்டு படங்களும் நன்றாக உள்ளதாம்.
இதில் ஓ காதல் கண்மணி படத்தில் மணிரத்னம் மறுபடியும் தன் காதல் ஆயுதத்தை கையில் எடுத்து வெற்றிபெற்று விட்டார் என கூறப்படுகிறது. படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது.
காஞ்சனா-2 வழக்கம் போல் திகில்+நகைச்சுவையுடன் பி,சி செண்டர் ஆடியன்ஸுகளை வெகுவாக கவரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
விக்ரம் பிறந்தநாள் சிறப்பு வீடியோ

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top