↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயம் ரவி, த்ரிஷா, நடிப்பில் உருவாகி வரும் 'அப்பாடக்கர்' படத்திற்கு தமன் இசையமைத்து வருகின்றார் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததுதான். இந்த படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்களை அழைத்து வந்து ஒரு பாடலை பாட வைத்த தமன், தற்போது இன்னொரு பிரபல இசையமைப்பாளரையும் இதே படத்திற்காக பாட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கானா பாடல்களை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் என்ற பெருமையை பெற்ற பிரபல இசையமைப்பாளர் தேவாவை இந்த படத்திற்காக தமன் ஒரு பாடலை பாட வைத்துள்ளார். இந்த பாடலும் கானா சாயலில் இருப்பதால் இந்த பாடலை தேவா பாடினால் பொருத்தமாக இருக்கும் என கருதிய தமன் இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் அப்பாடக்கர்' படத்தில் மூன்று பிரபல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, சூரி, விவேக், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை பூர்ணா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top