↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நேற்று முன் தினம் பிரபல நாளிதழ் ஒன்று எடுத்த சர்வேயின்படி 'தல அஜீத்' மிகவும் விரும்பத்தக்க கோலிவுட் நாயகன்' என்ற விருதை பெற்றார் என்பதை பார்த்தோம். தற்போது அதற்கு சமமான 'மிகவும் விரும்பத்தக்க கோலிவுட் நாயகி' சர்வேயின் முடிவு இன்று காலை வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் பல தமிழ் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த நடிகைகள் புகழ்பெற்று வரும் நிலையில் இந்த விருது பிரிட்டனில் பிறந்து வளர்ந்து தமிழ் உள்பட இந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்ற எமி ஜாக்சனுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு 6வது இடத்திலும், 2013ஆம் ஆண்டு 3வது இடத்திலும் இருந்த எமி ஜாக்சன், 2014ஆம் ஆண்டில் முதலிடத்தை பெற்றுள்ளார். ஷங்கரின் பிரமாண்ட திரைப்படமான 'ஐ' படத்தில் நடித்ததே அவர் இந்த நிலைக்கு வர காரணம் என்று கூறப்படுகிறது.

எமி ஜாக்சனை அடுத்து இரண்டாவது இடத்தில் ஸ்ருதிஹாசனும், மூன்றாவது இடத்தில் சமந்தாவும், நான்காவது இடத்தில் தமன்னாவும் உள்ளனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா 7வது இடத்திலும், ஹன்சிகா 13வது இடத்திலும் உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top