↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
வரும் மே மாதம் 15ஆம் தேதி சூர்யாவின் 'மாஸ்' மற்றும் ஆர்யாவின் 'புறம்போக்கு என்னும் பொதுவுடமை' ஆகிய படங்கள் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த பட்டியலில் ஜெயம்ரவியின் 'ரோமியோ ஜூலியட்' படமும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஜெயம் ரவி, ஹன்சிகா, வம்சி கிருஷ்ணா, பூனம் பாஜ்வா மற்றும் பலர் நடித்த 'ரோமியோ ஜுலியட்' படத்தை லட்சுமணன் என்பவர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செளந்திரராஜன் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மே 15ஆம் தேதி ரிலீஸாகும் என தெரிகிறது.
அனிருத் பாடிய 'டண்டனக்கா' பாடல் உள்பட இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது ஒரு சிறப்பம்சம் ஆகும்.
மாஸ், புறம்போக்கு, ரோமியோ ஜூலியட் ஆகிய மூன்று படங்கள் ரிலீஸாகவுள்ள நிலையில் இதே தேதியிலோ அல்லது ஒரு சிறிய இடைவெளி விட்டோ ஜோதிகாவின் '36 வயதினிலே' படமும் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment