த்ரிஷாவின் முன்னாள் காதலராக கிசுகிசுக்கப்பட்டவர் ராணா.
இவர், தமிழில் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தவர். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஆர்யா, சிம்பு போன்று தான் தெலுங்கு சினிமாவில் நடிகர் ராணா.
இவர், இதுவரை 30 ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்திருக்கிறாராம். த்ரிஷா, தமன்னா, பிபாஷா பாசு என இவரது டேட்டிங் ஹீரோயின்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக த்ரிஷாவுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவரை ஜோடியாக பார்த்திருப்பீர்கள்.
சமீபத்தில் ராணாவிடம் நிறைய ஹீரோயின்களுடன் நீங்கள் டேட்டிங் செய்திருக்கிறீர்களாமே என்று கேட்டதற்கு, அடிக்கடி பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி அப்படி தகவல்கள் வெளியாகின்றன. சிலருடன் எனக்கு தொடர்பு இருந்தது உண்மை என்றாலும் நிறைய கிசுகிசுக்களில் உண்மை இல்லை. 30 பெண்களுடன் நான் டேட்டிங் செய்திருக்கிறேன்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? கொஞ்சம் பொறுங்க இதை நான் சொல்லவில்லை. என்னைப் பற்றி மீடியாக்களில் இப்படித்தான் தகவல்கள் வெளிவந்திருக்கிறது என்று இவ்வாறு ராணா கூறினார். ராணா சாதுர்யமாக பதில் அளித்தாலும் சிலருடன் தனக்கு லிங்க் அப் இருந்தது உண்மை என்று அவரே ஒப்புக்கொண்டிருப்பதால் அவருடன் தொடர்பில் இருந்த ஹீரோயின்கள் யார் என்ற பேச்சு அனல் பறக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.