↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜோதிகாவை மீண்டும் திரையில் பார்க்கவிருக்கும் திரைப்படம் “36வயதினிலே” . சென்சார் பார்வைக்கு சென்று க்ளீன் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. 

சமீப காலத்தில் சென்சார் சென்ற எந்த படமும் காட்சி நீக்கம் அல்லது வெட்டு இல்லாமல் சான்றிதழ் பெறவில்லை. ஆனால் எந்த வித காட்சி நீக்கமும் இல்லாமல் க்ளீன் யூ சான்றிதழுடன் திரைக்கு வர தயாராக இருக்கிறது ஜோதிகாவின் 36வயதினிலே.
மலையாளத்தில் மஞ்சுவாரியார் ரி எண்ட்ரி கொடுத்து ஹிட் அடித்த “ஹவ் ஓல்டு ஆர் யூ” படத்தின் தமிழ் ரீமேக் தான் 36வயதினிலே. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரிவ் தான் தமிழிலும் இயக்கியிருக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரகுமான், இளவரசு, நாசர், அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். படம் வரும் மே மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top