↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்று கடந்த சில நாட்களாக 'மிகவும் விரும்பத்தக்க நட்சத்திரங்கள்' குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழ், மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் இதுவரை வெளியாகியுள்ளது. 

இந்த பட்டியலில் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே நடிகை நயன்தாரா என்று தற்போது தெரிய வந்துள்ளது. கோலிவுட் பட்டியலில் ஏழாவது இடத்தையும், தெலுங்கு படவுலக பட்டியலில் 14வது இடத்தையும், மலையாள திரையுலக பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ள நயன்தாராவை சமூக வலைத்தளங்களில் 'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்' என்று அவருடைய ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இதே போன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் 'மிகவும் விரும்பத்தக்க நட்சத்திரங்கள் பட்டியலில் அனுஷ்கா ஷெட்டி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பட்டியலில் 6வது இடத்திலும், தெலுங்கு பட்டியலில் 3வது இடத்திலும், கன்னட பட்டியலில் 13வது இடத்திலும் அனுஷ்கா ஷெட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top