↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான், சலீம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் நடித்துள்ள மூன்றாவது திரைப்படம் 'இந்தியா பாகிஸ்தான்.

கடந்த இரண்டு படங்களையும் ஆக்சன் அதிரடி படங்களாக கொடுத்த விஜய் ஆண்டனி, முதல்முறையாக இந்த படத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடி அம்சங்கள் நிறைந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு சமீபத்தில் சென்சார் போர்டு 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி', ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்கள் வருவதாலும், அதற்கு அடுத்த வாரம் மே 1ஆம் தேதி கமல்ஹாசனின் உத்தம வில்லன், ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' மற்றும் எஸ்.பி.ஜனநாதனின் 'புறம்போக்கு என்னும் பொதுவுடமை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதாலும், விஜய் ஆண்டனி தனது 'இந்தியா பாகிஸ்தான்' படத்தை மே 8ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டும் சுமார் 200 தியேட்டர்களை புக் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top