↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா இயக்கியுள்ள 'வை ராஜா வை' திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் நேற்று வெளியானது.

கச்சிதமான எடிட்டிங்கில் வெளியாகியுள்ள இந்த டிரைலரே படத்தை பார்க்க தூண்டும் வகையில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து கூறியதோடு ஐஸ்வர்யாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதிலும், டிரைலரின் கடைசியில் தனுஷ், 'இப்ப எம்.எல்.ஏஆக இருக்கேன்...எம்.பி.ஆயிடுவேனா? என்று ஸ்டைலாக பேசும் வசனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது படங்களில் அரசியல் வசனங்களை தவிர்த்து வரும் நிலையில் அவரது மருமகன் அரசியல் வசனம் பேசி நடித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, டேனியல் பாலாஜி, விவேக், சதீஷ், வசந்த், காயத்ரி ரகுராம், உள்பட பலர் நடித்து இந்த படத்தில் கொக்கி குமாராக தனுஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top