↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad மனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.
இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுகின்றனர்.
புகையை பற்றிய சில உண்மைகள்
1. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும், உங்கள் வாழ்நாளில் இருந்து 1 மணி நேரத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் (உதாரணமாக, ஒரு நாளைக்கு 5 சிகரெட் வீதம் ஒரு வாரத்திற்கு பிடிக்கும் புகை, உங்கள் மொத்த வாழ்நாளில் இருந்து 1 நாளை குறைத்து விடுகிறது).
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயன பொருட்களும் அடங்கும்.
3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது, இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கின்றது.
இதனால் இயற்கை மாசுபடுவதோடு, உங்கள் அருகில் உள்ள அப்பாவிகளும் நீங்கள் விடும் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.
4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் (Carbon Monoxide)செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.
6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.
7. புகை பழக்கம் உள்ளவர்களுக்கு உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம்.
குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.
9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே “Passive Smoking” என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.
10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும். உங்களை விட உங்களால் அடுத்தவர்களுக்கு கேடுகள் அதிகம் என்பதை உணரவேண்டும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top