↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விராட் கோஹ்லியுடன் என்னை ஒப்பிடுவது நியாயமற்றது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கூறியுள்ளார்.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பராக உள்ள உமர் அக்மல் தொடர்ச்சியாக சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் உமர் அக்மல் அடிலெய்டில் செய்தியாளரிடம் பேசுகையில், பாகிஸ்தான் அணிக்கு 100 சதவிதம் என்னுடைய பங்கை அளிக்க வேண்டும் என்பதே என்னுடைய முயற்சி. ஆனால் கோஹ்லியுடன் என்னை மக்கள் ஒப்பிடுவது நியாயமற்றது. அவருடைய துடுப்பாட்ட முறை உயர்வானது.
ஆறு அல்லது ஏழாவது வரிசையில் அவர் துடுப்பெடுத்தாட வந்தால், பின்னர் நான் இந்த ஒப்பிடுதலை ஏற்றுக் கொள்வேன்.
எனக்கு முதல் வரிசையில் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது விளையாடுவதை விட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top