நிர்பயா மானபங்க விவகாரம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட டாக்குமென்ட்ரி படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் குற்றவாளி அளித்த பேட்டிக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நவ்யா நாயர்,
மானபங்க நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என கூறியதாக பரபரப்பு எழுந்தது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது.பிரச்னை முற்றுவதை உணர்ந்த நவ்யா நாயர், பேஸ்புக்கில் விளக்கம் அளித்திருக்கிறார். ‘நான் சொன்னது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது.
அதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நாட்டில் மானபங்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பது மட்டும் கிடப்பிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக டிவியில் நிறைய விவாதங்கள் நடப்பதை பார்க்கிறேன். அதில் பேசுபவர்கள் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதுதான் மானபங்க நிகழ்வுகளை ஒழிப்பதற்கு தீர்வு என குறிப்பிட்டனர்.
நமது கலாசாரம், சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசு இதுபற்றி சரியான விவாதம் நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்’ என்றார்.தான் வெளியிட்ட கருத்து தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நவ்யா நாயர் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.