↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தோனேஷியாவில் பெண் ஒருவரின் வீட்டை வாங்குபவர்கள் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பரபரப்பான விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தேனேஷியாவில், சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் விளம்பரத்தின் இறுதியில், "ஒரு அரிய வாய்ப்பு" இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்த விளம்பரத்தில் வீட்டின் உரிமையாளரான வீனா லியா(Wina Lia Age-40) என்ற பெண்ணின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அனைத்து ஊடகங்கள் மற்றும் பொலிசாரும், இது மோசடி விளம்பரம் என எண்ணி அவரது வீட்டை நோக்கி படை எடுத்துள்ளனர்.
அப்போது அப்பெண்ணிடம் விசாரித்ததில், இது எல்லாம் அவரது நண்பரான ரியல் எஸ்டேட் தரகரின் வேலை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வீனா கூறுகையில், எனது ரியல் எஸ்டேட் நண்பரிடம் வீட்டை விற்பது குறித்து விளம்பரப்படுத்துங்கள் என கூறியிருந்தேன்.
அதே சமயம் வீட்டை வாங்க விருப்பமுள்ளவர், திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருப்பதுடன், மனைவியையும் தேடுபவராக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றேன்.
அவ்வாறு யாராவது வீட்டை வாங்க முன்வந்தால் விதவையாக இருக்கும் நான் அந்நபருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நினைத்திருந்தேன்.
ஆனால் ஒருபோதும் இந்த விவரத்தை ஓன்லைனில் வெளியிடுமாறு நான் கூறவில்லை என்றும் இது தரகர் செய்த வேலை தான் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top