↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பை அரையிறுதியில், இந்தியாவும், நியூசிலாந்தும் பலப் பரிட்சை நடத்த வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளனவாம். நடப்பு உலக கோப்பை பி பிரிவில் இந்தியாவும், பி பிரிவில் நியூசிலாந்தும் முதலிடத்திலுள்ளன. இதுவரை இவ்விரு அணிகளுமே, தத்தம் பிரிவில் தோல்வியே காணவில்லை.
ஏ பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணியுடன், பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி, காலிறுதியில், மோத வேண்டும் என்பது விதிமுறை. தற்போதுள்ள நிலைப்படி, ஏ பிரிவில் வங்கதேசம் கடைசியில் இருப்பதால், அதனுடன்தான், இந்தியா பலப் பரிட்சை நடத்தும் என்று தெரிகிறது. அதேபோல நியூசிலாந்து, பி பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணியுடன் காலிறுதியில் மோதும். பி பிரிவில் கடைசி இடம் யாருக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் அந்த இடத்தை பிடிக்க போராடிவருகின்றன.
எப்படி இருந்தாலும், வங்கதேசத்தை இந்தியாவும், பி பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணியை, நியூசிலாந்தும் துவம்சம் செய்யப்போவது உறுதி என்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள். அப்படி ஒருவேளை நடந்து, இந்தியா, நியூசிலாந்து ஆகியவை அரையிறுதிக்கு முன்னேறினால், அப்போது இவ்விரு அணிகளுமே பலப் பரிட்சை நடத்த வேண்டிவரும் என்கிறது ஐசிசி ரூல்ஸ். இவ்விரு அணிகளுமே உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால், இப்போதே பல்ஸ் எகிறுகிறது ரசிகர்களுக்கு.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
»
worldcup
» ஆஹா.. அனல் பறக்குமே..! உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து மோத வாய்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment