↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஜிம்பாப்வேக்கு எதிரான எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி புது வரலாறு படைத்துள்ளது. உலக கோப்பை பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை தான் சந்தித்த பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, யு.ஏ.இ, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்திய இந்தியா, ஜிம்பாப்வேயை இன்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
மேலும், உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2011 உலக கோப்பையின்போது, சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றிக்கு பிறகு, இந்த உலக கோப்பையின் முதல் 4 போட்டிகளில் வெற்றி வெற்றிகளையும் சேர்த்தால், இந்தியா தொடர்ந்து 9 வெற்றிகளை பெற்று அசத்தியிருந்தது.
ஜிம்பாப்வேக்கு எதிரான, இன்றைய வெற்றியையும் சேர்த்தால் இந்தியாவின் வெற்றிப் பயணம், 10 போட்டிகளாக அதிகரித்துள்ளது.
2003ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வென்றிருந்த சாதனையை, டோணி தலைமையிலான தற்போதைய அணி கடந்த போட்டியின்போதே, முறியடித்தது.
கங்குலி தலைமையிலான அணி, ஒரே தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது. டோணி அண்ட் கோ, இரு உலக கோப்பைகளையும் சேர்த்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிளைவ் லாய்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான, 1975ல் இருந்து, 1979வரை தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றது. இன்று 10வது போட்டியில் டோணி அணி வெற்றி பெற்று லாய்டு சாதனையை டோணி அண்ட் கோ முறியடித்துள்ளது.
ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 27 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் முதலிடத்திலுள்ளது. அந்த வகையில், இந்தியா 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» உலக கோப்பை வரலாற்றிலேயே, 2வது பெஸ்ட் டீம் இந்தியாதான்..! எப்படி தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment