↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
m-m-600x300
பாப்பிசை சக்கரவர்த்தியான மைக்கேல் ஜாக்சனும் தானும் இளமைக்காலத்தில் காதல் ஜோடியாக இருந்ததாக அமெரிக்க நடிகை மவ்ரீன் மெக்கார்மிக் (Maureen McCormick) தெரிவித்துள்ளார்.
58 வயதான மவ்ரீன் மெக்கார்மிக் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர். ஆனால், 1969 முதல் 1974 வரை அமெரிக்காவில் ஒளிபரப்பான த பிறடி பன்ச் எனும் தொலைக்காட்சித் தொடரில் சிறுமியாக நடித்ததன் மூலம் இவர் அதிகம் பிரபலமாகியிருந்தார். இவர் மைக்கேல் ஜாக்சனை விட இரு வருடங்கள் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் ஜாக்சனையும் அவரின் சகோதரர்கள் நால்வரையும் கொண்ட ‘ஜக்சன் 5′ எனும் இசைக்குழு 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு புகழ்பெற ஆரம்பித்திருந்தது. இதனால், மைக்கேல் ஜாக்சன், மவ்ரீன் மெக்கார்மிக் இருவருமே தமது சிறுபருவத்திலேயே அவர்களுடைய துறைகளில் பிரபலமானவர்களாகத் திகழ்ந்தனர். பிறடி பன்ச் படப்பிடிப்புத் தளங்களுக்கும் மைக்கேல் ஜாக்சன் பல தடவை பயணம் செய்திருந்தார்.
இந்நிலையில் தமது இளமை பருவத்தில் மைக்கேல் ஜாக்சனும் தானும் காதலித்ததாக நடிகை மவ்ரீன் மெக்கார்மிக் தெரிவித்துள்ளார். தற்போது தென் ஆபிரிக்காவில் நடைபெறும் தொலைக்காட்சி படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் திடீரென மரணமடைந்து சுமார் 6 வருடங்களாகும் நிலையில், மைக்கேல் ஜாக்சனுடனான காதல் குறித்து முதல் தடவையாக பகிரங்கமாக பேசியுள்ளார் நடிகை மவ்ரீன் மெக்கார்மிக்.
“நான் மைக்கேல் ஜாக்சனின் வீட்டுக்கு எல்லா நேரங்களிலும் செல்வேன். நாம் ஒருவரோடொருவர் கரம் கோர்த்துக் கொண்டிருப்போம். கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறோம். ஆனால் ஒருபோதும் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டதில்லை. மைக்கேல் ஜாக்சன் மிக இனிமையானவர். அதேவேளை மிக வெட்க சுபாவமுடையவர்” என நடிகை மவ்ரீன் மெக்கார்மிக் கூறியுள்ளார்.
0mj
பின்னர், பிறடி பன்ச் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் பெரி வில்லியம்ஸையும் காதலித்தவர் மவ்ரீன் மெக்கார்மிக். 1995 ஆம் ஆண்டு மைக்கேல் கம்மிங்ஸ் என்பவரை மவ்ரீன் மெக்கார்மிக் திருமணம் செய்துகொண்டார். இத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். பாடகர் மைக்கேல் ஜாக்சன், பிரபல நடிகை புரூக் ஷீல்ட் உட்பட பலரை காதலித்தார். 1994 ஆம் ஆண்டு, புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் மகளான லிசா மேரி பிரெஸ்லியை அவர் திருமணம் செய்தார்.
சிறு பருவத்திலேயே லிஸா பிரெஸ்லியும் மைக்கேல் ஜாக்சனும் அறிமுகமாகியிருந்தபோதிலும் 1992 ஆம் ஆண்டு அவர்களுக்கிடையில் காதல் மலர்ந்ததாக இவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 1996 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனும் லிசா பிரெஸ்லியும் விவாகரத்து செய்தனர். அதன்பின் மருத்துவ தாதியான டெபி ரோவை மைக்கேல் ஜாக்சன் திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு 1997 ஆம் ஆண்டு மைக்கேல் ஜோசப் ஜாக்சன் ஜூனியர் எனும் மகனும் 1998 ஆம் ஆண்டு பரிஸ் ஜாக்சன் எனும் மகளும் பிறந்தனர். 1999 ஆம் ஆண்டு டெபி ரோவை மைக்கேல் ஜாக்சன் விவாகரத்து செய்திருந்தார். பின்னர் 2002 வாடகைத் தாய் ஒருவர் மூலம் பிரின்ஸ் ஜாக்சன் எனும் ஆண் குழந்தைக்கு மைக்கேல் ஜாக்சன் தந்தையானார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top