வடக்கு அர்ஜண்டீனாவில் உள்ள பரானா(Parana) நகரில் வசிக்கும் கிறிஸ்டீனா செரில்(Cristina Ceril) என்ற பெண் தன் 2 வயது குழந்தையை பார்த்து கொள்வதற்காக ஈவ் மன்தாராஸ் (Eve Mantaras Age-25) என்ற செவிலிப் பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவை இந்த செவிலியப் பெண் அபகரித்தது மட்டுமின்றி குழந்தையின் கன்னத்திலும், உடலெங்கும் பலமாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனைதொடர்ந்து அந்த உணவை குழந்தையின் முன்பே அமர்ந்தபடி அவர் சாப்பிடவும் தொடங்கியுள்ளார்.
இதனால் பசியால் வாடிய குழந்தை அழத் தொடங்கியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளன.
மேலும் கிறிஸ்டீனாவின் கைப்பேசியுடன் வீட்டில் உள்ள கண்காணிப்பு கமெரா இணைக்கப்பட்டுள்ளதால் இதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதற்கிடையே குழந்தையின் சத்தம் கேட்ட அங்கு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். அதே வேளையில் கிறிஸ்டீனா இத்தகவலை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், கமெரா காட்சிகளை பார்த்ததுடன், அந்த செவிலிப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தன் குழந்தையின் உடலில் மன்தாராஸ் தாக்கி ஏற்படுத்திய காயங்களை பார்த்து கிறிஸ்டீனா கண்ணீரில் மூழ்கியுள்ளார்.
0 comments:
Post a Comment