↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கேரளா சினிமா எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவர் லிபர்ட்டி பஷீர் பற்றியும், மம்முட்டியின் பயர்மேன் மற்றும் பிருத்விராஜின் பிக்கெட் ஆகிய இரண்டு படங்களும் ஹிட் இல்லை.. ஆவரேஜ் கலெக்சன் தான் என சில தினங்களுக்கு முன் அவர் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தோம். மேலும் போஸ்டர் மேஜிக் மூலமாகவே இந்தப்படங்கள் ஹிட் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன என்றும் சொல்லியிருந்தார் பஷீர்..
இதை கேள்விப்பட்ட பயர்மேன் படத்தின் தயாரிப்பாளர் மிலன் ஜலீல் கொந்தளித்து விட்டார். “கேரளா சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும் மலையாள படங்கள் பாக்ஸ் ஆபிசில் நின்று கலெக்சன் செய்வதில்லை என்கிற சூழல் நிலவத்தான் செய்கிறது. ஆனால் எங்களது பயர்மேன் இந்த வருடத்தின் முதல் ஹிட் படம் என்பதில் சந்தேகமேயில்லை. சாட்டிலைட் உரிமையெல்லாம் சேர்த்து 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதலீடு செய்தவன் என்கிற முறையில் இது எனக்கு தெரியும்.
ஆனால் லிபர்ட்டி பஷீர் போன்ற சினிமா அனுபவஸ்தர்கள் ஏன் இப்படி தவறான தகவல்களை கூறுகிறார்கள் என்றுதான் புரியவில்லை” என கொந்தளித்துள்ளார்..ஆனால் லிபர்ட்டி பஷீர் தரப்போ, “பார்த்தீர்களா.. சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து தான் 5 கோடி என அவரே ஒப்புக்கொண்டார் பார்த்தீர்களா..? அப்படியானால் தியேட்டர் கலெக்சன் சரியில்லை என்றுதானே அர்த்தமாகிறது. தியேட்டர் வசூல் குறைவாக இருக்கிறது என்றுதானே லிபர்ட்டி பஷீர் சொன்னார்.. இதில் எப்படி தவறு காணமுடியும்” என்கின்றனர். ஆக தயாரிப்பாளருக்கு போட்ட காசு வந்துருச்சு.. தியேட்டர்காரர்களுக்கு சரியான வசூல் இல்லை.. இதுதான் நிதர்சன உண்மை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment