ஆனால் காதல் என்றால் என்ன? இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொல்வார்கள்.
பார்த்ததும் காதல், பழகிய பின் காதல், நட்பின் அடிப்படையில் காதல், திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்கு பின் காதல் என பல வகை காதல் உண்டு.
மற்ற காதல்களை காட்டிலும் கண்டதும் காதல் சற்று வித்தியாசமானது. இப்போதெல்லாம் இந்த கண்டதும் காதல் அதிகமாக நடக்கிறது.
திருமண வீடு, திருவிழாக்கள், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் ஒரு பெண்ணை பார்த்துவிட்டால், ஆண் சட்டென காதலில் வீழ்ந்து விடுகிறான்.
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான். ஆனால் இது உண்மைதானா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும்.
கண்டதும் காதல் சரிதானா?
ஒரு ஆண், ஒரு அழகிய பெண்ணை பார்க்கும் போது மனதுக்குள் காதல் கொள்கிறான்.
அவளை கண்டவுடன், இவனது மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் அடிக்கும், ஆகாயத்தில் பறப்பான்.
ஆண் மட்டுமல்ல, பெண்ணுக்கும் கண்டதும் காதல் வந்தால் இவ்வாறு தான் நடக்கும் என சினிமா, சீரியல்களில் காட்டுவார்கள்.
ஆனால் ஒரு ஆண் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வரும் பெண்ணை பார்க்கையில், அந்த பெண்ணை அவனுக்கு பிடித்து விட்டால் அதற்கு காரணம், அவனது மனதில் தனது எதிர்கால மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து எண்ணங்கள் இருக்கும்.
அப்படிப்பட்ட பெண்ணையே அவன் முதன் முதலில் பார்க்கும் போது, சட்டென காதல் கொள்கிறான்.
எனக்குரியவள் அவள்தான், அவளை காதலிப்பதற்காகவே இந்த உலத்தில் பிறந்தேனோ என காதல் ரசம் பொழிவார்கள், இது ஒரு ரகம்.
மற்றொரு ரகம் என்னவெனில் மயக்கும் அழகுடன் செல்லும் பெண்ணை கண்டவுடன் சட்டென காதலில் விழுந்துவிடுவார்கள்.
ஆனால், இந்த கண்டவுடன் காதலில் ஒரு சுவாரசியம் என்னவெனில், காதலியின் பெயர், ஊர், குணம் என எதுவும் தெரியாது, வெறும் தோற்றம் மட்டுமே அவன் மனதில் நிழலாடும்.
இதனை காதல் என்று சிலர் சொன்னாலும், காமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆம், முதல் முறையாக ஆணும், பெண்ணும் பார்த்துக்கொள்ளும் போது அவர்களுக்குள் காதல் வந்தால் அது காமம் எனும் உணர்ச்சியால் தான் வருகிறது என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் ‘கண்டதும் காதல்' குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
18 வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் டாக்டர். டான்மாய் சர்மா ஆய்வு மேற்கொண்டதில், காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று அவர்களின் பலவித உணர்ச்சிகளை MRI Scan மூலம் ஆய்வு செய்ததன் மூலம், கண்டதும் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment