ரஜினி சில மாதங்களுக்கு முன் மே ஹுன் ரஜினிகாந்த் என்ற இந்திப் படத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தி இருப்பதாகவும், தன்னை தவறாக சித்தரிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை பிரதிவாதியாக சேர்க்க கோரி பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, இயக்குனர் கஸ்தூரி ராஜா என்னிடம் கடன் கேட்டார், நான் தர மறுத்தேன். ஆனால் அவரோ நான் தரவில்லை என்றால் என்னுடைய சம்பந்தி ரஜினி கொடுப்பார் என கைப்பட எழுதிக் கொடுத்தார்.
ஆனால் அவரும் திருப்பி தரவில்லை, ரஜினியும் திருப்பித் தர முயற்சியும் எடுக்கவில்லை. வட இந்தியாவில் எடுக்கப்பட்ட படத்தால் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்று வழக்கு தொடர்ந்த ரஜினி, தமிழ்நாட்டில் அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சம்பந்தி விஷயத்தில் தலையிடாமல் இருக்கிறார் என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஒரு வாரத்துக்குள் பதில் அனுப்பும்படி ரஜினி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment