↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் இணைந்த மாஸ் நடிகர் சூர்யாவுக்கு கோலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரும் வரவேற்பு கொடுத்தனர் என்பது அறிந்ததே. கடந்த இரண்டு நாட்களில் சூர்யாவுக்கு 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் குவிந்துள்ள நிலையில் இன்னும் ஏராளமானோர் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூனியர் பச்சன் என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், சூர்யாவின் சமூகவலைத்தள வரவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'குரு' படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் அபிஷேக் பச்சனுக்கு சூர்யா குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது முதலே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நிலையில் 'நான் மிகவும் மதிக்கும் நபர்களில் மிகவும் முக்கியமானவர் சூர்யா' என்று அபிஷேக் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top