↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நோக்கியா நிறுவனம் உலகின் தலைசிறந்த மொபைல் நிறுவனம் என்ற பெயரை இழக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது, எதனால் இந்த நிலை என்பதை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
நோக்கியா போன்கள் அனைத்தும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தான் இயங்குகின்றது. ஆரம்பத்தில் வெளியான நோக்கியா மொபைல்கள் பிரச்சனைகளை சந்தித்தது அதன் விற்பனையை பெரிதும் பாதித்தது.
இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் முதலில் ஆன்டிராய்டு அல்லது ஆப்பிள் பயன்படுத்தினால் அடுத்து வாங்கும் போனும் ஆன்டிராய்டு அல்லது ஆப்பிள் ஆக தான் இருக்கின்றது.
இன்று விண்டோஸ் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகின்றது.
சந்தை நிலவரங்கள் பல மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் நோக்கியா நிறுவனம் முன்பு போல் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல நிறுவனங்களும் போட்டி போட்டு கருவிகளை வெளியிட்டு வரும் நிலையில் நோக்கியா தன் சார்பில் புதிய கருவிகளை வெளியிடுவதில் பின் தங்கியே இருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment