உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடந்த லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி 287 ஓட்டங்களை குவித்து இந்திய அணிக்கு சற்று கடின இலக்கை நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தவித்தது. பின்னர் வந்த டோனி, ரெய்னா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.
ஜிம்பாப்வேக்கு எதிரான பரபரப்பான ஆட்டம் குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், கடந்த சில போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் நெருக்கடி ஏற்பட்டது.
வேகப்பந்து வீச்சாளர்களாயினும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களாயினும் சரி, துடுப்பாட்ட வரிசையாயினும் சரி ஒவ்வொருவருக்கும் நெருக்கடி தருணங்களும் சவால்களும் ஏற்பட்டன.
இருதரப்பு தொடர்களில் கீழ் வரிசை துடுப்பாட்டக்காரர்களுக்கு அதிக சவால்கள் ஏற்படுவதில்லை. இதனால் தான் இத்தகைய போட்டிகள் கடினமாக இருக்கிறது.
ஏனெனில் இங்கு கீழ்வரிசை துடுப்பாட்டக்காரர்களுக்கு துடுப்பெடுத்தாட நிறைய வாய்ப்புகள் ஏற்படவில்லை.
இந்திய அணியின் இந்த மாற்றத்திற்கு திட்டமிடுதல் போன்ற நடைமுறைகளே காரணம். வீரர்கள் தங்கள் பொறுப்புகளை கையில் எடுத்து கொண்டு சிறப்பாகச் செயல்பட்டதும் இந்த வெற்றிகளுக்கு ஒரு காரணம்.
காலிறுதிக்கு முன்னதாக கொஞ்சம் இடைவெளி தேவை. ஏற்கெனவே இடைவெளி இருந்ததால் தான் அணியால் இந்த அளவுக்கு விளையாட முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment