↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சென்னையில் உள்ள புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர்.

இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்தன. இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். 2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தாலி பெண்களுக்கு அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்றை அறிவித்தது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத மத ஒழுக்கவாதிகள் சிலர் அந்த தொலைக்காட்சியின் ஒளிப்பாதிவாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அதிகாலையில் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 2 டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top