↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக் கிண்ணத் தொடரின்  31வது லீக் போட்டியில் நியூசிலாந்து– ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்தின் நேபியர் மைதானத்தில் நடைபெற்று வரும்  போட்டியில், நாணய சுழற்சியில்  வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தானின் அணியின் முன்னிலை வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
187 என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
நியூசிலாந்து தான் மோதிய 4 போட்டியிலும் வென்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளது.  ஆப்கானிஸ்தான் 4 போட்டியில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top