↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலினுடன் நயன்தாரா நடித்த 'நண்பேண்டா' திரைப்படம் இன்னும் தமிழகம் முழுவதும் பெருவாரியான தியேட்டர்களில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நயன்தாராவின் அடுத்த படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மலையாள சீனியர் நடிகர் மம்முட்டியுடன் நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது. தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி கேரளா முழுவதும் பெருவாரியான தியேட்டர்களில் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ், காவலன் ஆகிய படங்களை இயக்கிய  பிரபல இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மம்முட்டி, நயன்தாரா, ஹரிஸ்ரீ அசோகன், ஜனார்த்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். தீபக் தேவி இசையமைத்துள்ள இந்த படத்தை ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே மம்முட்டியுடன் நயன்தாரா மூன்று படங்களில் ஜோடியாக நடித்துள்ள நிலையில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படம் அவருடன் நடிக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top