↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய எம்.பி.யான சாக்ஷி மகாராஜ், குடும்ப கட்டுப்பாட்டு விஷயத்தில், நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரேமாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும், நாட்டு நலன் கருதி குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறி புது சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில் இந்து மகா சபையை சேர்ந்த சாத்வி தேவா தாகூர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கருத்தடை செய்யவேண்டும் எனக் கூறியிருந்தார். இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்ட தலையங்கத்தில், சாத்வி தேவா கருத்தடைக்கு பதிலாக குடும்ப கட்டுப்பாடு என்ற வார்த்தையை தான் பயன்படுத்தியிருக்கவேண்டும். இஸ்லாமிய சமுதாயம் மற்றும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே இது வலியுறுத்தப்படுகிறது. குறைவான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment