பாலிவுட் நடிகை சன்னி லியோன் பற்றி ட்வீட் போட்ட காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வியை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட பலரும் ட்விட்டரில் விளாசியுள்ளனர்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவர் நடித்ததோடு மட்டும் அல்லாமல் ஆபாச படங்களை தயாரித்தும் வந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை பூஜா பட் சன்னி லியோனை அழைத்து வந்து பாலிவுட்டில் நடிக்க வைத்தார். அதில் இருந்து சன்னி மும்பையில் தங்கி படங்களில் படுகவர்ச்சி காட்டி நடித்து(?) வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி சன்னி லியோன் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
மேற்கத்திய நாடால் நிராகரிப்பட்ட சன்னி லியோன் போன்றவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தின் உதாரணமாகவும், பாலிவுட் பிரபலமாகவும் ஆக ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று அபிஷேக் சிங்வி ட்வீட் செய்தார்.
சிங்வி சன்னி லியோனை பற்றி போட்ட ட்வீட்டை பார்த்து பலர் கொதித்தெழுந்துள்ளனர். அதில் முதல் ஆளாக கண்டனம் தெரிவித்த பெருமை ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் உமர் அப்துல்லாவையே சேரும்.
ஆமாம் சார், இத்தாலியைச் சேர்ந்த ஹோட்டல் பணிப்பெண் கூட இந்தியாவில் பெரிய ஆளாகுகிறார்கள். என்ன தான் நடக்கிறது என்று லையிங் லாமா என்பவர் ட்விட்டரில் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment