↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை ஒரு பந்தில் நழுவ விட்டார் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல். உலகக் கோப்பை போட்டியில் இன்று சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் ஸ்மித் 72 ரன்களிலும், கிளார்க் 68 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், வாட்சன் ஜோடி இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தது. மேக்ஸ்வெல் 51 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் சதமடித்தார். 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் அடித்த முதல் சதம் இது. உலகக் கோப்பை போட்டியில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2 சதமும் கூட. முன் கடந்த 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் அந்த சாதனையை தகர்க்க கிடைத்த வாய்ப்பை ஒரு பந்தில் கோட்டை விட்டார் மேக்ஸ்வெல்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment