↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமெரிக்கா அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் குண்டு வெடித்தது போல் அதி பயங்கர சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த பத்திரிக்கையாளர் அறை இழுத்து மூடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலபாமாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் சென்ற ஒபாமாவை சந்திப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர், நேற்று வெள்ளை மாளிகையில் கூடியிருந்தனர். அப்போது, வெள்ளை மாளிகையின் வடக்கு புல்வெளிப் பகுதியில் அதி பயங்கரமான சத்தம் கேட்டது. குண்டு வெடித்ததைப் போன்று அச்சத்தம் இருந்ததால், வெள்ளை மாளிகையில் இருந்த அனைவரும் அச்சமடைந்தனர்.
உடனடியாக, அமெரிக்க ரகசிய சேவை பிரிவு வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் அறையை இழுத்து மூடினர். பின்னர், சத்தத்திற்கான காரணம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது வெள்ளை மாளிகை அருகே நின்றிருந்த உணவு வாகனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தே சத்தத்திற்கு காரணம் எனக் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனபோதும், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விபத்து ஏதேச்சையாக ஏற்பட்டதா அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியா என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Home
»
news
»
news.world
» குண்டு வெடித்தது போல் அதிபயங்கர சத்தம்... பதறிப் போன ஒபாமாவின் வெள்ளை மாளிகை!
Recent Posts
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
யார் இந்த மயூரன் சுகுமாரன்?
ஆம்! போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்த எட்டுப்பேரின் உயிர்களை காவுகொண்டு தனது நாட்டின[...]
பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ பாடலுக்கு ஆடிய ஐ.ஐ.டி மாணவர்கள்! வைரலாகும் வீடியோ!
ஐ.ஐ.டி. மாணவர்களின் காமெடி நடனம் யூ-டியூபில் வைரல் ஹிட்டாக வலம் வருகிறது. பிரபல பாப் பாடகி ’ரே ஜ[...]
மாணவிகளே ஓடாதீங்க, கன்னித்தன்மை போயிடும்: இஸ்லாமிய பள்ளி முதல்வர் உத்தரவு
ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட[...]
சிங்கப்பூரில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள்! (வீடியோ இணைப்பு)
சிங்கபூரின் ஜோராங் கிழக்கு தெரு கவுசிங் போர்டில் 371 வது வீட்டில் ஒரு பச்சிளங்குழந்தை 2 வது மாடியின[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.