↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக கோப்பையில், அயர்லாந்துக்கு எதிராக இன்று இந்தியா பெற்ற வெற்றியின் மூலம், பல்வேறு புதிய சாதனைகளை டோணி அண்ட் கோ தகர்த்துள்ளது. உலக கோப்பையில், இன்று அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி. இந்த வெற்றி பல்வேறு புதிய மைல் கல்லை தொடர அச்சாரம் போட்டுக் கொடுத்துள்ளது டோணி படைக்கு.

1975 மற்றும் 1979ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில், கிளைவ் லாய்ட் தலைமையிலான, வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அந்த சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை இந்தியா வீழ்த்தினால், புது சாதனை படைக்கப்படும்.

தொடர்ச்சியான வெற்றியில், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அது 1999 முதல் 2011 வரை மொத்தம், 25 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.

கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையில் மொத்தம் 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் டோணி தலைமையில், இதுவரை உலக கோப்பையில், மொத்தம் 12 போட்டிகளை இந்தியா வென்றுள்ளது. அதில் 9 வெற்றி தொடர்ச்சியாக பெற்றதாகும்.

2003 உலக கோப்பையில், 8 வெற்றிகளை கேப்டன் கங்குலி தலைமையில் பெற்றிருந்தது இந்தியா. டோணி தலைமையிலான இந்திய அணி 2011 மற்றும் நடப்பு உலக கோப்பை தொடர்களில் சேர்த்து, தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்றுள்ளது.

சச்சின் டெண்டுல்கர்-ஜடேஜா இணைந்து 1996 உலக கோப்பையில், கென்யாவுக்கு எதிராக, முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்த நிலையில், இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா- தவான் ஜோடி 174 ரன்கள் குவித்து ஒரு சாதனை படைத்துள்ளது.


டோணி தலைமையில், இந்திய அணி உலக கோப்பை தொடர்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. 2011 உலக கோப்பையின்போது, இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டுமே தோற்றிருந்தது. இங்கிலாந்துடன் டை ஆனது. பிற அனைத்து போட்டிகளையும் வென்று, கோப்பையையும் கைப்பற்றியது. நடப்பு உலக கோப்பையில் முதல் 5 ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது. டோணியின் கேப்டன்ஷிப், ஐசிசி தொடர்களில் மிளிர்வதை இது காண்பிக்கிறது.

டோணி 2011 மற்றும் 2015 உலக கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்து, இதுவரை 11 போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். கபில் தேவ் 1983 மற்றும் 1987 உலக கோப்பை தொடர்களில் கேப்டனாக இருந்து 10 போட்டிகளை வென்று கொடுத்தார். 1992, 1996 மற்றும் 1999 ஆகிய உலக கோப்பைகளில் இந்தியாவின் கேப்டனாக அசாருதீன் இருந்தபோதும், 9 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top