↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விராட் கோஹ்லியைவிட, இலங்கையின் சங்ககாராவை பார்த்துதான் எதிரணிகள் பயப்படுவதாக, அந்த நாட்டின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான், முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்லைவிடவும், சங்ககாராதான் ஆபத்தான பேட்ஸ்மேன் என்றும் அவர் வர்ணித்துள்ளார். உலக கோப்பையில், இலங்கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சங்ககாரா, அடுத்தடுத்து 3 போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.

இதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை சங்ககாரா பெற்றுள்ளார்.


நேற்று இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 376 ரன்களை குவித்தது. இருப்பினும், அசராது பின்தொடர்ந்த இலங்கை 312 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இருப்பினும் சங்ககாரா 104 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் களத்தில் நிற்கும்வரை இலங்கைக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது.

இதுகுறித்து முத்தையா முரளிதரன், கூறியதாவது: ஆஸ்திரேலியாவுடன், இலங்கை தோற்றிருந்தாலும், அதன் பாசிட்டிவ் எண்ணம் கவர்வதாக உள்ளது. பவுலர்கள் அதிக ரன்கள் வாரிக் கொடுத்திருந்தாலும், இலங்கை பேட்ஸ்மேன்கள் தக்க பதிலடி கொடுத்தனர். 40வது ஓவர்கள் வரை, ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தியபடிதான் இருந்தது இலங்கை.

64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்று வெறுமனே கூறினால், இலங்கை பேட்டிங்கின் முக்கியத்துவம் அடிபடுகிறது. ஆனால் போட்டியை பார்த்தவர்களுக்குதான், இலங்கையின் சிறப்பான ஆட்டம் பற்றி தெரியும்.

குமார் சங்ககாராதான் தற்போது, உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். நீங்கள், விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் பற்றி என்னதான் பெருமையாக பேசினாலும், தற்போதைய டாப் பேட்ஸ்மேன் சங்ககாராதான். மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஒரு வீரரை பார்த்து பிற அணிகள் அச்சப்படுகின்றன என்றால், அது சங்ககாராவை பார்த்துதான்.

உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று சதங்களை அடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், பந்துக்கு ஏற்ப ரன் சேர்ப்பது மிகவும் சிரமம். அதை சங்ககாரா சாதித்து காண்பித்துள்ளார்.

சங்ககாரா இந்த உலக கோப்பை போட்டியுடன், ஓய்வு பெறும் முடிவில் இருப்பதால், தனது முழுத் திறனையும் வெளிக் காண்பித்து விளையாடி வருகிறார். ஃபிரண்ட் புட், பேக் புட் என அனைத்து வகை ஷாட்டுகளிலும் அவர் கலக்குகிறார்.wor

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top