↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தனது பவுன்சர் பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடி அவுட் ஆவதற்கான காரணத்தை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மாவே இன்று விளக்கினார். நடப்பு உலக கோப்பையில், இந்தியாவின் மிக சிக்கனமான பவுலர் என்று பெயரெடுத்துள்ளவர் மோகித் ஷர்மா. 10 ஓவர்களில் சராசரியாக 39 ரன்கள்தான் கொடுக்கிறார் மோகித் ஷர்மா என்கிறது புள்ளி விவரம். அயர்லாந்துக்கு எதிராக நாளை இந்தியா பலப் பரிட்சை நடத்த உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், மோகித் ஷர்மா.

அவர் கூறியதாவது: எனக்கு முன்னால் பந்து வீசும் முகமது ஷமியும், உமேஷ் யாதவும் சிறப்பாக பவுலிங் செய்வதால், எனக்கு நெருக்கடி குறைந்து விடுகிறது. நானும் சிறப்பாக பந்து வீசினால், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு நெருக்கடி இருப்பதில்லை.

ஷமியும், உமேஷ் யாதவும், பேட்ஸ்மேன்களை நெருக்கடியிலேயே வைத்திருப்பதால், நான் எனது பாணியில் பந்து வீச முடிகிறது. அப்போது எனக்கு விக்கெட்டுகள் கிடைக்கின்றன.


ஷாட் பிட்ச் பந்துகளில் நான் அதிகம் விக்கெட் எடுப்பதாக கூறுகிறார்கள். அது உண்மைதான். ஆஸ்திரேலிய மைதானங்களில் எனது பந்து வீச்சு இன்னும் வேகமாக செல்கிறது. நான் பவுன்சர் வீசும்போது, எதிரணி பேட்ஸ்மேன்களால் அதன் வேகத்தை கணிக்க முடிவதில்லை. அவர்கள் கணிப்பதைவிட எனது பந்து வேகமாக செல்வதால், கேட்ச் கிடைக்கிறது. அல்லது பேட்டில் படாமல் பந்து செல்கிறது. அதேநேரம், சில நேரங்களில் பவுண்டரியும், சிக்சரும் கூட இதுபோன்ற பந்துகளில் பறக்கும் என்பதை மறுக்க முடியாது.

இந்திய பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும், இன்னும் மேம்படுத்த வேண்டிய வேலைகள் பாக்கியுள்ளன. இதுவரை ஆடிய போட்டிகளில் இந்திய பந்து வீச்சுக்கு கடைசி நேர நெருக்கடியை எதிரணிகள் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை கடைசி நேரத்தில் பதற்றத்துக்கு நடுவே பந்து வீசும்போது, நமது பவுலர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம். அதுகுறித்து கவனம் செலுத்திதான் வருகிறோம்.

கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடிவந்த இந்திய அணி, இப்போதுதான், முதல்முறையாக நியூசிலாந்து பிட்சில் களம் காண உள்ளது. இங்குள்ள மைதானங்கள், பரப்பளவில் சிறியவையாக உள்ளன. இதை பவுலர்கள் கருத்தில் வைத்து பந்து போட வேண்டியது அவசியம். இதற்காக, பந்து வீச்சு அளவில் (லைன்) சிறிது மாற்றம் செய்ய வேண்டிவரும். ஆனால், மைதானத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது பந்து வீச்சாளர்களுக்கு இயலாத காரியம். இதே மைதானத்தில்தான் எதிரணியும் பவுலிங் செய்தாக வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளோம்.

வலைப் பயிற்சியின்போது, ஐந்து பவுலர்களும் ஒன்றாகவே பந்து வீசி வருகிறோம். இதனால், எங்களுடைய அனுபவங்களை ஷேர் செய்துகொள்ள முடிகிறது. இவ்வாறு மோகித் ஷர்மா கூறினார். இதனிடையே இந்தியாவின் ஃபீல்டிங் தரம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சற்று குறைவுபட்டதை போல தெரிந்ததை கருத்தில் கொண்டு, ஃபீல்டிங் பயிற்சிகளை கடுமையாக அளித்து வருகிறார், அதற்கான கோச், ஸ்ரீராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top