↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ஒரு நிரந்தர இடைத்தை பிடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவருடைய வருகையால் அமலாபால், லட்சுமி மேனன், பிந்துமாதவி உள்ளிட்ட சில நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

அதோடு இரண்டாம் தட்டு ஹீரோக்களின் பேவரைட் நாயகி லிஸ்டில் இப்போது ஸ்ரீதிவ்யாதான் முன்னணியில் இருக்கிறார். காரணம், இவருக்கு படத்துக்குப்படம் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக நினைக்கும் மேற்படி ஹீரோக்கள், அவர் தங்கள் படத்தில் நடித்தால் படத்தின் வெற்றிக்கு பலமாக இருப்பார் என்று நம்புகிறார்கள். அதனால் முன்னணி நடிகைகளின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் அடுத்த சாய்ஸாக ஸ்ரீதிவ்யாவின் பக்கம் திரும்பி விடுகிறார்களாம்.

ஆனால், ஸ்ரீதிவ்யாவோ இப்படியே நாம் இரண்டாம் தட்டு ஹீரோக்களுடனே நடித்துக்கொண்டிருந்தால் அடுத்தகட்டத்துக்கு எப்போது செல்வது என்று தனது முன்னேற்றம் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம். அதனால் முன்னணி ஹீரோக்களுக்கு எப்படி வலைவிரிக்கலாம் என்று தீவிரமாக யோசனை செய்து வருகிறாராம்.

அதோடு தன்னை கண்டுகொள்ளாமல் இருக்கும் சில முன்னணி ஹீரோக்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம். அதன் காரணமாக, இதுவரை கமிட்டான படங்கள் போக, இனிமேல் தான் நடிக்கப்போகும் படங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றும், மார்க்கெட் இல்லாத ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top