↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

விஜய் 59 படத்தில் விஜய் போலீஸ் ஆபிசராக நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் அவரது கான்ஸ்டபிளாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் அட்லி நடிகர் வடிவேலுவை சந்தித்து இப்படத்தின் கதையை கூறியிருகிறாராம்.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்துவரும் வடிவேலு, கனமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் காமெடியனாக நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top