↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கலக்கியுள்ளார். ஆணைப் பெண் கல்யாணம் செய்வது, பெண்ணை ஆண் கல்யாணம் செய்வது, பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் கல்யாணம் செய்வது எல்லாம் பழைய பேஷன். அதை முறியடித்து தன்னைத் தானே திருமணம் செய்து அசத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். தான் 40 வயதைத் தொடுவதற்குள் தனக்கேற்ற ஜோடியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனால், தன்னைத் தானே மணந்து கொள்வதாக இவர் ஏற்கனவே சவால் விட்டிருந்தார். அதன்படி இவரது 40வது பிறந்த நாள் வந்தபோது தன்னைத் தானே மணந்து கொண்டுள்ளார்.
ஹூஸ்டனில் இந்த நூதனத் திருமணம் நடந்தது. சும்மா இல்லை பெரும் பொருட் செலவில் இந்தத் திருமணத்தை நடத்தினார் யாஸ்மின் எலிபே என்ற அந்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்.
ஜனவரி 3ம் தேதி ஹூஸ்டன் ஆப்பிரிக்க அமெரிக்க கலாச்சார அருங்காட்சியகத்தில் இந்தத் திருமணத்தை நடத்தினார் எலிபே. இதில் 10 மணப்பெண் தோழிகள், குடும்ப உறுப்பினர்கள், சில விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருமணச் சடங்குகளை எலிபேயின் சகோதரி நடத்தினார். இவர் உள்ளூர் அமைச்சரும் கூட. இது சட்டப்படியான திருமணம் இல்லை என்பதால் தனது சகோதரியையே திருமணத்தை நடத்த கேட்டுக் கொண்டார் எலிபே.
திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனுக்கும் திட்டமிட்டுள்ளார் எலிபே. கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு தேனிலவுப் பயணம் மேற்கொள்ளவுள்ளாராம். அதேபோல துபாயில் உள்ள ஜாஸ் திருவிழாவுக்கும் போகப் போகிறாராம்.
Home
»
special
» கல்யாணமாம் கல்யாணம்... தன்னைத் தானே மணந்த அமெரிக்கப் பெண்! தனியே ஹனிமூனுக்கும் போகிறார்!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.