↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கார்த்தி நடித்த 'கொம்பன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'கருப்பு நிறத்தழகி' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. டங்காமாரி, டண்டனக்கா பாடல்களை அடுத்து பட்டிதொட்டியெங்கும் இந்த பாடல்கள் ஒலித்து கொண்டிருப்பதால் இந்த பாடலை எழுதி பாடிய தணிக்கொடி மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தணிக்கொடி கூறியபோது 'பல திரைப்பட நிறுவனங்களில் நான் நடிக்க வாய்ப்பு கேட்டு போனபோது, நான் விஜயகாந்த் போன்று இருப்பதாகவும், எங்கள் படத்தில் நடித்தால் நீங்கள் பெரிய ஆளாக வந்துவிடுவீர்கள் என்று கூறி நடிக்க அழைத்தார்கள். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு ரூ.50,000 பணம் கேட்டார்கள். அவர்களிடம் நான் இதுவரை பல வீதிமேடைகளில் பணம் வாங்கிதான் பாடியிருக்கின்றேன் பணம் கொடுத்து இதுவரை எனக்கு பழக்கமில்லை என்று கூறி மறுத்துவிட்டேன்' என்று கூறினார்.

அதேபோல் 'கொம்பன்' படத்தில் நடிப்பதற்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதை அறிந்ததும் தான் அங்கே சென்றதாகவும், அந்த நேரத்தில் தான் பாடிக்காட்டிய 'கருப்பு நிறத்தழகி' பாடல் இயக்குனரை வெகுவாக கவர்ந்ததால் தனக்கு பாடல் எழுதி, பாட வாய்ப்பு கொடுத்ததோடு தனக்கு இந்த படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்து நடிக்கவும் வைத்த இயக்குனருக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top