↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் 'மாஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரலில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் சூர்யாவின் அதிரடி அறிமுகப்பாடல் ஒன்று இருப்பதாகவும் அந்த பாடல் 'தெறிக்குது தெறிக்குது' என்ற வரிகளில் ஆரம்பிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த பாடலை மதன்கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் படமாக்கப்பட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்த ஷோபி மாஸ்டர் சூர்யாவின் ஹிட் பாடல்கள் வரிசையில் இந்த பாடல் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். 

மேலும் இந்த பாடலின் ஒருசில வரிகளையும் படக்குழுவினர் சமீபத்தில் சூர்யாவின் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர். அந்த பாடலின் வரிகள் இதோ:

தெறிக்குது தெறிக்குது மாஸ்
இது கன்னாபின்னா மாஸ்
பறக்குது பறக்குது மாஸ்
இது பக்கா பக்கா மாஸ்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top