↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மணிரத்னம் இயக்கியுள்ள 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் நிலையில் இந்த படம் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்ட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரெலர் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் நேற்று இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஓகே பங்காராம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மலையாள நடிகர் தல்கூர் சல்மான் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளவர் 'நான் ஈ' புகழ் நானி என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. நேற்று வெளியான டிரைலரில் ஒலிப்பதும் அவருடைய குரல்தான் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனினும் அவரது படத்தில் டப்பிங் குரல் கொடுத்தது பெருமையாக இருப்பதாக நானி தெரிவித்துள்ளார்.

தல்கூர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன்,  ரம்யா, கனிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top