↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸின் சாதனையை அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 51 பந்துகளில் சதமடித்தார், இது இந்த உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் மிக விரைவாக அடிக்கப்பட்ட சதமாகும்.
இதற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் 52 பந்துகளில் சதமடித்தது தான் சாதனையாக இருந்தது.
அதோடு உலகக் கிண்ணப் போட்டியில் மிக விரைவாக சதமடித்த வீரர் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார் டிவில்லியர்ஸ்.
தற்போது டிவில்லியர்சை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார் மேக்ஸ்வெல்.
டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தை பார்த்து பார்த்துதான் மேக்ஸ்வெல்லும் தனது அதிரடி ஆட்டத்தை மெருகேற்றிக் கொண்டார்.
இந்நிலையில் டிவில்லியர்சின் சாதனையை உடைத்தெறிந்து குருவை மிஞ்சிய சிஷ்யராக ஆகியிருக்கிறார் மேக்ஸ்வெல்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top